சந்நிதியான் ஆச்சிரமம் முன்னெடுத்த திருவாகச விழா மற்றும் முன்னாள் இந்து கலாசார அமைச்சர் அமரர் தி.மகேஸ்வரனின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும் ஆகியன 01.01.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.
பேரவைத் தலைவர் பொ.அருணகிரிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கு.தயாளரூபினி, கு. தயாளநீதினி ஆகியோரின் திருவாசக இசைக்கச்சேரி பக்கவாத்திய சகிதம் இடம்பெற்றது. நிகழ்வில் ஆசியுரையை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார்.
அமரர் தி.மகேஸ்வரன் குறித்த நினைவுரையை புற்றளை மகா வித்தியாலய அதிபர் ஆ.சிவநாதன் ஆற்றினார். திருவாசகம் பற்றிய எழிலுரையை ஆசிரியர் துரை. கணேசமூர்த்தி நிகழ்த்தினார்.
சிறப்பு நிகழ்வாக திருவாசகத்தைக் கற்போர் மனதைக் கவர்வதில் விஞ்சி நிற்பது தத்துவ அறிவா? பக்தி உணர்வா? என்ற பொருளில் பட்டிமண்டபம் இடம்பெற்றது.
தத்துவ அறிவே என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சி.ரமணராஜா, ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் சி.கா. கமலநாதன் ஆகியோரும் பக்தி உணர்வே என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாhளர் இ.சர்வேஸ்வரா, சமூகசேவை உத்தியோகத்தர் வே. சிவராஜா ஆகியோர் வாதிட்டனர். நடுவராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் பங்கேற்றார்.
நிகழ்வில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வின்போது 140 மாணவர்களுக்கு ஆச்சிரம சுவாமிகளால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment