//]]>

Sunday, January 14, 2018

உள்ளூராட்சித் தேர்தல் சட்டமீறல்: வேட்பாளர்கள் உட்படப் பலர் கைது



உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக இதுவரை 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தமாதம் 09 ஆம் திகதியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை-06 மணி வரையான காலப்பகுதியில்   கைது செய்யப்படுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 55 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், நேற்றைய  தினம் மாத்திரம் தேர்தல் சட்டங்களை மீறிய 13 முறைப்பாடுகள் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment