எமது மக்கள் சமஸ்டி அரசாங்கம் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் 1956 ஆம், 1960 ஆம், 1965 ஆம்,1975 ஆம் ஆண்டு, 1975 ஆம் ஆண்டுத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வாக்களித்து வந்தார்கள். அத்தகைய எதிர்பார்ப்புடன் தான் கடந்த-2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். வடக்கு- கிழக்கு இணைப்பு, தம் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகியவற்றிற்காக நாங்கள் எந்த வித விட்டுக் கொடுப்புக்களையும் செய்ய முடியாது என்பதில் தமிழ்த் தலைமைகள் என்றென்றும் உறுதியாகவிருக்க வேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுக்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவருடைய எதிர்பார்ப்பாகும். அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றத் தீர்மானித்திருக்கிறது. ஜனவரி மாதம்-11 ஆம் திகதி புதிய அரசியல் அமைப்பு ஒரு வேளை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் தமிழ்மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படாத ஒரு அரசியல் அமைப்பாக அது காணப்பட்டால் அதனைத் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அடியோடு நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுக்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவருடைய எதிர்பார்ப்பாகும். அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றத் தீர்மானித்திருக்கிறது. ஜனவரி மாதம்-11 ஆம் திகதி புதிய அரசியல் அமைப்பு ஒரு வேளை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் தமிழ்மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படாத ஒரு அரசியல் அமைப்பாக அது காணப்பட்டால் அதனைத் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அடியோடு நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.
இன்று திங்கட்கிழமை(02) பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையிலே ஒரு புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில் முழுப் பாராளுமன்றமும் ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டது. அத்துடன் வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டு அதனுடைய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு டிசம்பர் மாதம்-10 ஆம் திகதி இடைக்கால அறிக்கையை வெளியிடுவதாகக் கூறிய அரசாங்கம் தாமதமாக ஜனவரி மாதம்- 09, 10, 11 ஆம் திகதிகளில் ஒரு முழு நாள் விவாதத்தை நடாத்தி இடைக்கால அறிக்கையை வெளியிடுவதாகத் தற்போது தீர்மானித்துள்ளது.
இலங்கையில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோருடைய காலப் பகுதியில் நாங்கள் தனி இராஜ்ஜியமாக இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள். ஆங்கிலேயர் தங்களுடைய நிர்வாக வசதிக்காக 1833 ஆம் ஆண்டிலே இலங்கை என்ற அமைப்பை உருவாக்கினார்கள். ஒரு நாடாக உருவாகிச் சுமார்-200 வருடங்களே இன்னமும் ஆகாத நிலையில் தற்போது மீண்டும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது. ஒரு நாடாக இலங்கை உருவான பின்னர் 1920 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு டோனமூர் அரசிய அமைப்புக் கொண்டு வரப்பட்டது. அந்த டொனமூர் அரசியல் அமைப்புக் கொண்டுவரப்பட்ட காலப் பகுதியில் முழு இலங்கைக்கும் ஒரு பூரண சுயாட்சி கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை யாழ்ப்பாணத்திலிருந்து முன்வைக்கப்பட்டதே தவிர அதிகாரப் பகிர்வு என்ற கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.
ஆனால், முன்னாள் பிரதமர் எஸ்.ஆர்.டபிள்யூ. பண்டாரநாயக்கா 1926 ஆம் ஆண்டில் இலங்கை மூன்று சமஸ்டி அரசுகளாகக் காணப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை டொனமூர் அரசியல் அமைப்புக் குழுவூடாக விடுத்திருந்தார். அந்த வேளையிலும் துரதிஷ்டவசமாகத் தமிழர் தாயகப் பகுதியிலிருந்து எங்களுடைய மக்கள் சமஸ்டியைக் கேட்டிருக்கவில்லை. டொனமூர் அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கைக்கு ஓரளவு சுதந்திரத்தை வழங்குவதற்கு ஆங்கிலேயர்கள் தீர்மானித்த பின் 1947 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பிற்குக் கூட தமிழ் மக்களின் முழுமையான சம்மதம் பெறப்படவில்லை.இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1972 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அமரர் திருமதி- ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் காலப் பகுதியில் குடியரசு அரசியல் அமைப்பும், 1978 ஆம் ஆண்டு தற்போதிருக்கின்ற நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையைக் கொண்ட அரசியல் அமைப்பு முன்னாள் ஜனாதிபதி அமரர் - ஜே. ஆர் ஜெயவர்த்தனாவினால் கொண்டு வரப்பட்டது.
1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட போது தமிழ்மக்களின் தலைவராகவிருந்த அமரர்-ஜீ.ஜீ.பொன்னம்பலம் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று அங்கு மகாராணியாரைச் சந்தித்துச் சுயநிர்ணய உரிமை உட்படப் பல விடயங்களை வற்புறுத்தி விட்டுக் கப்பலில் நாடு திரும்புவதற்கிடையில் சட்ட சபை உறுப்பினர்கள் அந்த அரசியல் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தார்கள். அதன் பின்னர் அதே ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது சட்ட சபை உறுப்பினராகவிருந்த ஒருவர் மரணப் படுக்கையிலிருந்த போது அப்போதைய தமிழ்மக்களின் தலைவர்களில் ஒருவராகவிருந்த அமிர்தலிங்கத்தைச் சந்தித்து 'நாங்கள் தமிழ்மக்களுக்குத் துரோகம் செய்து விட்டோம்' எனக் கண்ணீர் வீட்டுக் கதறியழுதார். ஆகவே, தற்போது எமது அரசியல் தலைவர்கள் தவறிழைத்துவிட்டுப் பிற்காலத்தில் வருந்துவதால் தமிழினத்திற்கு எந்தவித நன்மையையும் உண்டாகாது என்பதை உணர வேண்டும்.
எங்களுடைய அரசியல் அமைப்பிலே 1972 ஆம் ஆண்டி இலங்கை குடியரசாக உருவாக்கப்பட்ட பின்னர் 1976 ஆம் ஆண்டு மே மாதம்-14 ஆம், 15 ஆம் திகதிகளில் வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனிநாட்டுக்கான தீர்மானம் பல்லாயிரக்கான மக்கள் மத்தியில் நிறைவேற்றப்பட்ட போது அந்தத் தீர்மானத்தை வெளியிடாதவாறு அரசாங்கம் அவசரகாலச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி அதனை அடுத்தநாள் ஊடகங்களில் வெளியிட முடியாதவாறு தடை செய்தது.
அதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர்கள் அதனைத் துண்டுப் பிரசுரமாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் உட்படப் பல பகுதிகளிலும் விநியோகித்த போது அமரர்கள்-அமிர்தலிங்கம், துரை இரத்தினம், வி.என்.நவரத்தினம், பண்டிதர் க.பொ.இரத்தினம் மூன்று பேரும் அவசரகாலச் சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசேட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். மிகவும் புகழ்பெற்ற தந்தை செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், திருச் செல்வம் உட்பட 67 சட்டத்தரணிகள் ஆஜராகி வாதாடினார்கள். அதிலே அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட விதம் பிழையானது என்பதால் இந்த விசேட நீதிமன்றம் செல்லுபடியாகாது என வாதிட்டிருந்தார். அமரர் திருச் செல்வம் உங்களுக்கு எம் மீது வழக்குப் போடுவதற்கான இறைமை இல்லை எனும் வகையிலான வாதத்தை முன்வைத்திருந்தார். அந்த நீதிமன்றம் அமரர்-ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான சட்டத்தரணிகளின் வாதத்தை ஏற்றுக் கொண்டு அவசர காலத் தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட விதம் செல்லுபடியற்றது எனக் கூறி அவர்களை விடுதலை செய்திருந்தார்கள்.
ஆனால், அவர்கள் அந்த விசாரணையின் போது குற்றவாளிகளாக இனங்காணப்பட் டிருந்தால் 20 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை, சொத்துப் பறிமுதல் உட்பட பல பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஆகவே, அப்போது தமிழர் தரப்பு எங்களுக்காக வாதாடிய விடயத்தைத் தற்போதிருக்கின்ற தலைவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
ஆனால், அவர்கள் அந்த விசாரணையின் போது குற்றவாளிகளாக இனங்காணப்பட் டிருந்தால் 20 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை, சொத்துப் பறிமுதல் உட்பட பல பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஆகவே, அப்போது தமிழர் தரப்பு எங்களுக்காக வாதாடிய விடயத்தைத் தற்போதிருக்கின்ற தலைவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
எங்களிடமிருக்கும் இறைமையை நாங்கள் கையளிக்கப் போகின்றோமா? இல்லையா? என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் அமைப்பும் எங்களுடைய சம்மதமில்லாமல் தான் நிறைவேற்றப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசியல் அமைப்பிற்கான வழிகாட்டுதல் குழுவிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளியேற வேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் சொல்லுகின்ற போது சிலர் அதனை அபத்தமான கருத்தாகக் கருதுகிறார்கள். ஆனால், எமது இனத்திற்கு மீண்டும் ஒரு துரோகம் இழைக்கப்படக் கூடாது என்பதற்காகவே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். ஆனால், தற்போது இது சம்பந்தமாக விவாதிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில்,நாங்கள் இது தொடர்பில் விவாதித்து ஒரு தீர்க்கமான ஒரு முடிவை எட்ட வேண்டும். புதிய அரசியல் அமைப்பிற்கு நாங்கள் சம்மதம் தெரிவிப்போமானால் இது தான் முடிந்த கதை. அதற்குப் பின்னர் நாம் எத்தகைய முயற்சியை மேற்கொண்டாலும் பயனில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தற்போது தமிழ்மக்களின் நம்பகத் தன்மையுள்ள தலைமையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிருக்கின்ற காரணத்தால் புதிய அரசியல் அமைப்புக் குறித்து நிதானமான வகையில் முடிவுகளை எடுக்க வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பிற்குண்டு. ஆகவே, நாங்கள் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம் காலத்திலிருந்து வலியுறுத்தி வந்த சுயநிர்ணய உரிமையை விட்டுக் கொடுக்கப் போகிறோமா? இல்லையா? என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment