யாழ்.திருநெல்வேலிச் சந்தியில் பொருத்தப்பட்டுள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் எரிந்த சந்தர்ப்பத்தில் நிறுத்தாமல் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிற்காமல் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குறித்த இரு இளைஞர்களையும் கோப்பாய்ப் போக்குவரத்துப் பொலிஸார் வழிமறித்து அவர்களுக்கெதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ததன் அடிப்படையில் குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை(16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களான இரு இளைஞர்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபா அபராதமாக விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment