//]]>

Friday, February 10, 2017

கிழக்கில் ‘எழுக தமிழ்’ – பேரெழுச்சியுடன் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் (Photos)


தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் இன்று, ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், ‘எழுக தமிழ்’ நிகழ்வு பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக ஆரம்பமானது.
வடக்கு, கிழக்கு இணைப்பு, அரசியல் கைதிகளுக்கு விடுதலை, மக்களின் காணிகளை விட்டு இராணுவமே வெளியேறு, பௌத்த மயமாக்கலை நிறுத்து, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே, ஆகிய ஐந்து விடயங்களை முன்னிறுத்தி, இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களால், முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், சுலோக அட்டையும் ஏந்திச் செல்லப்பட்டன.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணி, நாவற்குடா விவேகானந்தா மைதானத்தை அடைந்ததும், மதியம் 12 மணியளவில் எழுக தமிழ் எழுச்சி மாநாடு ஆரம்பமானது.
இதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.
மேலும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.






























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment