கவிஞர் சேரன், கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானுடவியல்துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார். பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கும் இவர் பல்துறை ஆளுமை கொண்டவராக அறியப்பட்டவர். ஈழ தமிழ்க் கவிஞர்களில் முக்கியமானவர் ஆவார்.
இவரது படைப்புகள் ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் மற்றும் ஈழத் தமிழர்களின் வாழ்வியலைப் பேசுவதாகவும், அங்கு நடந்த இனப் படுகொலை இவரது படைப்புகளில் பிரதான அம்சங்களாக அமைந்திருக்கின்றன. இவரது கவிதைகள் மலையாளம், தெலுங்கு, கன்னடம், சீனம், ஜப்பானிய மொழிகள் உட்பட 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதோடு, பல்கலைக்கழகங்களிலும், இலக்கிய அரங்குகளிலும் வாசிக்கப்படுகின்றன. ஆங்கில மொழிபெயர்ப்பில் 4 கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.
மறைந்த O.N.V.குருப் (Ottaplakkal Neelakandan Velu Kurup), கேரளாவின் முக்கியமான கவிஞர், கேரள இடதுசாரி பாரம்பரியத்தில் முக்கியமானவர். இவர் பெயரில் ONV Foundation நிறுவப்பட்டது. அவரது முதலாவது நினைவாண்டில் வழங்கப்படவிருக்கிற சர்வதேச கவிதை விருதை கவிஞர் சேரன் பெறுகிறார்.
0 comments:
Post a Comment