யாழ். மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாகக் கடும் குளிருடனான காலநிலை நிலவுகிறது.
கடும் குளிர் காரணமாகப் பொதுமக்கள் தங்களின் காலை நேரச் செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
கடும் குளிர் காரணமாக நோயாளர்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சளி, காய்ச்சல் அதிகமாக ஏற்படுவதால் பனியின் தாக்கமுள்ள நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதனை தவிர்க்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
பனியின் தாக்கம் மாலை-05.30 மணிக்கே ஆரம்பிப்பதுடன் காலை-09 மணி வரை நீடிக்கிறது. எதிர்வரும் பங்குனி மாத இறுதி வரை பனியின் தாக்கம் காணப்படும் என மூத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment