யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலை களில் க. பொ.த உயர்தரத்தில் தமிழ்ப் பா டத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டத்துக்கான வழிகாட்டல் கருத்தரங்கினை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும்-04 ஆம், 05 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீட மண்டபத்தில் காலை-08 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை இடம்பெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்க ள் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்
குறித்த கருத்தரங்கில் வடமாகாணத்தின் அனைத்து க.பொ.த உயர்தரத் தமிழ்ப்பாட ஆசிரியர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment