//]]>

Wednesday, January 31, 2018

ரவியிடமிருந்து உதவித்தலைவர் பதவியைப் பறிக்க முடிவு!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான  குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய திலக் மாரப்பன தலைமையிலான குழுவொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனம் செய்திருந்தார். குறித்த குழுவின் அறிக்கை கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையிலேயே ஐக்கியதேசியக் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலக்கப்பட வேண்டும் என்வும், கட்சியின் தேசிய நிகழ்வுகளில் பங்கெடுப்பதிலிருந்து அவரை விலக்கி வைக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கை தொடர்பாக அலரிமாளிகையில் நேற்று(30) நடைபெற்ற  கூட்டத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐக்கியதேசியக் கட்சியின் அமைச்சர்கள் விரிவாக ஆலோசனை நடாத்தியுள்ளனர். இந்நிலையில் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் மூத்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment