யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை இம்மாத இறுதியில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் முன்னெடுத்துள்ளார்.
இதற்கமைவாக இந்த ஆண்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களின் விபரங்களை இந்த மாதம்-15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்துத் திணைக்களத் தலைவர்களுக்கும் யாழ். மாவட்டச் செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment