யாழ். தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்ல 35 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும்-17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல்-03 மணி முதல் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்- வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் க. ஜீவராணி சிறப்பு விருந்தினராகவும், யாழ். இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி- கமலாராணி கிருஷ்ண பிள்ளை கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது மகளிர் இல்லச் சிறுமிகளின் ஆக்கக் கண்காட்சி இடம்பெறவுள்ளதுடன் இசை அரங்கு மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் என்பனவும் நடைபெறவுள்ளன.
0 comments:
Post a Comment