வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பை வழங்கக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கடந்த பத்துநாட்களாகத் தொடர்ச்சியாக அமைதி வழியில் போராடி வருகின்றனர்.
நேற்றைய தினம் முற்பகல்-10.30 மணி முதல் 11.30 மணி வரை வடக்கின் பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மனித சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் அடுத்த கட்டமாக பதினோராம் நாளான இன்று வியாழக்கிழமை(09) காலை யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுக்க வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதன் போது பட்டதாரிகளின் பிரதிகள் அடங்கிய தொகுதியில் கையெழுத்துக்கள் பெறப்பட்டு வடக்கிலுள்ள பட்டதாரிகளின் மொத்த விபரங்கள் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆகவே, வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பட்டதாரிகளையும் இன்று காலை-08 மணியளவில் வடமாகாண சபை முன்பாக ஒன்று கூடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment