//]]>

Monday, March 13, 2017

மாசி மக நன்னாளில் நயினை நாகபூஷணி அம்மன் தீர்த்தமாடிய காட்சி (Photos)


மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.

அத்தகைய நன்னாளான கடந்த சனிக்கிழமை நயினை நாகபூஷணியாள் தீர்த்தமாடும் நிகழ்வு வெகு விமரிசையாக இடம்பெற்றது.
அன்னை உமாதேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.

மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும், முக்தியையும் அருள்பவர். செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்கக் கூடியவர். மாசி மக நாளை, ‘கடலாடும் நாள்’ என்றும், ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் அழைப்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

நயினை நாகபூசணியம்மன் கடலில் தீர்த்தமாடும் காட்சிகள் கீழே,


நயினை எம். குமரன்-
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment