வலி.தென்மேற்கு (சண்டிலிப்பாய்) பிரதேசசெயலகத்துக்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச்சங்களினால் நடாத்தப்பட்ட தையல் பயிற்சி நிறைவும், மாணவிகளின் தையல் கண்காட்சியும் நேற்று வியாழக்கிழமை(02) யாழ்.மானிப்பாய் கட்டுடை சைவத்தமிழ் வித்தியாலயத்தில் வலி.தென்மேற்கு உதவிப்பிரதேச செயலர் திருமதி.செல்வக்குமாரி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டது டன், யாழ்.மாவட்டக் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். பஞ்சலிங்கம் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் தையற்பயிற்சி பெற்ற மாணவிகளின் தைத்த ஆடைகளும், கலைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது டன், பயிற்சியை நிறைவு செய்த மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. பயிற்சிக்காலத்தி ல் திறமையாகச்செயற்பட்ட மாணவிகளுக்கான பணப்பரிசில்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி தையற்பயிற்சி நிலையத்தின் பயிற்சிக்குத் தேவையான துணி வகைகளை வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது 2016ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment