மனித நேய அமைப்புக்கள் ஒழுங்கமைத்து நடாத்தும் அமரர் பொன்னுத்துரை பாலகிருஷ்ணன் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வு "மனித நேய வேர்கள்" எனும் தலைப்பில் நாளை சனிக்கிழமை 16.09.2017 காலை 10 மணிக்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலையத்தில் (TCT Hall) இல் உள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் ஆரம்பமாகிறது.
இந்நிகழ்வின் தொடக்கவுரையினை யாழ். அரச அதிபர் வேதநாயகனும், சிறப்புரையினை உளவள ஆலோசகர் கோகிலா மகேந்திரனும், நினைவுரைகளை பல்வேறு பேச்சாளர்களும் நிகழ்த்துகின்றனர்.
அமரர் பொன்னுத்துரை பாலகிருஷ்ணன் சிறுகுறிப்பு
1990ம் ஆண்டு ஏற்பட்ட பல இடப்பெயர்வுகளில் அரச சார்பற்ற நிறுவனங்களையும் அரச நிர்வாகத்தையும் இணைத்து இடம் பெயர்ந்த மக்களது துயரங்களை துடைப்பதில் அயராது உழைத்தார்.
1995 இன் பின்னர் இடப்பெயர்வுகள் , மீள்குடியேற்றங்கள் , சுனாமி அனர்த்த காலங்களிலும் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியிலிருந்து யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறிய குடும்பங்களுக்காகவும் அளப்பரிய சேவை புரிந்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிகள் மிகுந்திருந்த 1990 கால கட்டத்தில் இடம் பெயர்ந்த குடும்பங்களது நிவாரணப் பணிகளுக்காக யேர்மன் சமஷ்டிக் குடியரசின் 300 மில்லியன் DM நிதியை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஊடாக சர்வதேச நிறுவனங்கள் மாவட்ட அரச நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு இடம் பெயர்ந்த மக்களது நெருக்கடியை தீர்க்க உதவினார்.
1991 இல் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடிருந்த வேளை CARE நிறுவனத்தின் சுழற்சி நிதி மூலம் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் விசேட கப்பல் மூலம் கொழும்பிலிருந்து விவசாய உள்ளீடுகள் தருவிக்க தீவிரமாகச் செயற்பட்டு விவசாய உற்பத்தியை தொடர வழிவகுத்திருந்தார்.
முன்னைநாள் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் நிர்வாக உத்தியோகத்தர், முன்னைநாள் UNHCR திட்ட அலுவலராக கடமையாற்றியதன் மூலம் மனித நேய செயற்பாட்டாளராக பலராலும் நன்கு அறியப்பட்டவர்.
31.07.2017 அன்று இறைபதமடைந்த பொன்னுத்துரை பாலகிருஷ்ணன் அவர்களை இந்நேரத்தில் நினைவு கூருவது எம் அனைவரதும் கடமையாகும்.
0 comments:
Post a Comment