வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செ ல்வச்சந்நிதி ஆலய ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழாவின் சப்பறத் திருவிழா நேற்றுத் திங்கட்கிழமை(05) இரவு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இரவு-08.30 மணியளவில் வேற்பெருமான் சப்பறத்திற்கு எழுந்தருளினார்.
பல்லாயிரக்கான பக்தர்கள் புடை சூழ அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் வேற்பெருமான் எழுந்ந்தருளி அருட்காட்சி கொடுத்தார். சப்பறத் திருவிழாவில் பெருமளவு அடியவர்கள் பறவைக்காவடிகள், செதில் காவடிகள் எடுத்தும், நேர்த்திகள் செய்தும், பஜனைப்பாடல்கள் பாடியும் முருகப்பெருமானை மெய்யன்புடன் வழிபட்டனர்.
தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(05) காலை -09 மணிக்கு இடம்பெறவுள்ளது.
0 comments:
Post a Comment