//]]>

Thursday, December 28, 2017

கேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

முல்லைத்தீவு கேப்பாப்புலவுப் பிரதேசத்தில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று(28)  விடுவிக்கப்படவுள்ளன.

கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அமைத்துள்ள படைத்தளங்களை இடம்மாற்றுவதற்குப் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு 148 மில்லியன் ரூபா பணத்தை இராணுவத்துக்கு வழங்கியிருந்தது. இதனையடுத்துப் படைத்தளங்கள் இடமாற்றப்பட்டு   133 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளன.

இதேவேளை, முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் 300 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடாத்தி வருகின்றனர். தமது நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment