//]]>

Saturday, December 23, 2017

தேர்தல் சட்ட விதிகளை மீறி ஊர்வலங்கள்: விளக்கம் கோரியுள்ள சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்

தேர்தல் சட்ட விதிகளை மீறிக் கடந்த வியாழக்கிழமை நடாத்தப்பட்ட ஏழு ஊர்வலங்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத்தாமைக்கான உரிய விளக்கங்களை வழங்குமாறு தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்கிரமரட்ன சம்பந்தப்பட்ட ஏனைய பிரதிப் பொலிஸ்மா அதிபர்களிடம் விளக்கம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், 

தேர்தல் சட்ட விதிமுறைகளை  மீறி நடாத்தப்படும் ஊர்வலங்களுக்கெதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குமிடையில் நேற்றுக் காலை(22) நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment