//]]>

Saturday, December 23, 2017

யாழ். மாவட்டச் சிகை ஒப்பனை நிலைய உரிமையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

நத்தார் மற்றும் புதுவருடத்தினை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் நாளை- 24  ஆம் திகதி மற்றும் எதிர்வரும்- 31 ஆம் திகதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிகை ஒப்பனை நிலையங்களைத் திறந்து தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்- 25 ஆம் திகதி திங்கட்கிழமை நத்தார் பண்டிகையினை முன்னிட்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும்-01.01.2018 முதல் வழமையான நேரக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment