//]]>

Sunday, December 24, 2017

யாழில் ஆரம்பமானது 'எழுதாரகை' புதிய படகு சேவை (Photos)



யாழ். எழுவைதீவு, அனலைதீவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் "எழுதாரகை" புதிய படகு சேவை ஆரம்பமாகியுள்ளது. இதற்கான ஆரம்ப வைபவம் யாழ். ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுகத்தில் நேற்றைய தினம்(23) பிற்பகல்-05 மணியளவில் நடைபெற்றது.

நவீனவசதிகளுடன் கூடிய குறித்த படகு சேவையினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சம்பிராதயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து  குறித்த படகில் முதலாவது பயணத்தையும் மேற்கொண்டனர்.

மத்திய அரசின் 132 மில்லியன் ரூபா செலவில் நவீனவசதிகளுடன் கூடிய புதிய படகு சேவை உருவாக்கப்பட்டுச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் மேற்படி பகுதிகளில் வதியும் 453 குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர். மேற்படி குடும்பங்கள் நீண்டகாலமாகப் படகு சேவையின்றி பாதிப்பினை எதிர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment