அமெரிக்க வட கரோலினா பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வராஜா மோகனராஜா மற்றும் அமெரிக்க பிறின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவன் ஞானசேகரன் மகிசன் ஆகியோருடன் புலம்பெயர் தமிழர்களின் கல்வி மற்றும் கலைச் செயற்பாடுகள் தொடர்பான அனுபவங்கள் பற்றிய
இன்று ஞாயிற்றுக்கிழமை(24) காலை- 9.30 மணி முதல் யாழ். கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி க.சிதம்பரநாதன் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமெரிக்கக் கல்வி முறையியல், புலம்பெயர் வாழ் ஈழ மக்களின் வாழ்வியல் மற்றும் கலை,கலாசாரச் செயற்பாடுகள் தொடர்பில் பேராசிரியர்- மோகனராஜாவும், அமெரிக்கப் பல்கலைக்கழக கல்வியியல் முறைமைகள், இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் இரண்டாம் தலைமுறையினரின் கலைச் செயற்பாடுகள், பங்களிப்புக்கள் குறித்துத் தாயகத்தில் பிறந்து புலம்பெயர்ந்து அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஞானசேகரன் மகிஷனும் கருத்துரைகள் ஆற்றினர்.
அதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் அரங்க நிகழ்வும் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment