ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், அவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த செய்தியை அவர் மறுத்துள்ளார்.
கண்டியில் எதிர்வரும் ஜனவரி மாதம்- 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
கடந்த- 2001-2004 காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவருடைய கட்சிக்குத் தாவி அமைச்சர் பதவியைப் பெற்றிருந்தார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அவர் அரசாங்கப் பேச்சாளராகவும் பதவி வகித்திருந்தார்.
தற்போது மகிந்த ராஜபக்ச ஆதரவுக் கூட்டு எதிரணியில் கெஹலிய ரம்புக்வெல அங்கம் வகித்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment