அரசாங்கத்தால் யாழ். மண்டைதீவில் சர்வதேச தரம் வாய்ந்த மைதானம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆராய்வுப் பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எமது செய்திச் சேவையின் யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் மேற்படி மைதானம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக சர்வதேசதர மைதானம் தொடர்பான அமைவிடம் தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள விசேட குழுவினர் உள்ளிட்டோர் மண்டைதீவுப் பகுதியில் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த ஆராய்வு நடவடிக்கையில் கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள பாராளுமன்ற உப சபாநாயகரும், இலங்கையின் துடுப்பந்தாட்டச் சபையின் தலைவருமான திலங்க சுமதிபால தலைமையிலான விசேட குழுவினருடன்,வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அரச அதிகாரிகள், கடற்படையினர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
சர்வதேசத்திலிருந்து வருகை தரும் அனைத்து வீரர்களும் தங்கக் கூடிய வகையிலும், அதிகளவான பார்வையாளர்கள் பார்வையிடும் வகையிலும் குறித்த மைதானம் அமையவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment