தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று(14) யாழ்.குடாநாட்டிலுள்ள பெரும்பலான உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளன.
வலிகாமத்தின் முக்கிய பிரதேசமான சுன்னாகம் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களும் பெரும்பாலும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் சுன்னாகம் நகர்ப்பகுதியை ஒட்டிய இரு பிரபலமான உணவகங்கள் திறக்கப்பட்டு இரவிரவாக வியாபாரம் அமோகமாக இடம்பெற்று வருகிறது. குறித்த இரு உணவகங்களிலும் பெருமளவான பொதுமக்கள் நீண்டநேரமாகக் காத்திருந்து இரவு வேளை உணவைப் பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
தைப்பொங்கல் நன்னாளைக் கொண்டாடும் முகமாக யாழிலுள்ள உணவகங்கள், வெதுப்பகங்கள் தொழிலாளிகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment