முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி கட்சியின் மத்திய செயற்குழுக்கு கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர இளம் தொழிலாளர்கள் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ரஜிக கொடிதுவக்குத் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷ தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சிதைத்துக்கொண்டிருக்கிறார். எமது கட்சியின் அங்கத்தவராகவும் ஆலோசகராகவும் செயற்பட்டுக்கொண்டு ஜீ.எல்.பீரிஸ் ஆரம்பித்துள்ள புதிய கட்சிக்கு உரமூட்டிக் கொண்டிருக்கிறார். இவரது செயற்பாடுகள் கட்சியின் அபிவிருத்திக்குப் பாதிப்பாகவும், மக்கள் மத்தியில் கட்சி தொடர்பில அதிருப்தி நிலைகளைத் தோற்றுவிக்கவும் காரணமாகவுள்ளன.
இதனால், இவர் கட்சியின் ஆலோசனைப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். எனவே, இதனடிப்படையில் நாம் எமது கோரிக்கையை கட்சியில் சமர்பிக்கவுள்ளோம் என்றார்.
0 comments:
Post a Comment