மத்திய வங்கியின் இரகசியத் தன்மை தொடர்பில் ஆணைக்குழுவில் அம்பலமான பல விடயங்கள் தொடர்பில் பிரதமர் அறிந்திருக்கவில்லை. எனவே, தனக்குக் கீழிருக்கும் அதிகாரிகளை அவர் நம்புவது தவறல்ல. அவர் பொலிஸ் உத்தியோகத்தரோ, இரகசிய பொலிஸ் அதிகாரியோ அல்ல. அவருக்கு இது தொடர்பான தகவல் கிடைத்திருக்கவில்லை எனப் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (04) விடுத்துள்ள விசேட அறிவிப்புத் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அர்ஜுன் மகேந்திரனை பிரதமர் நியமித்தது தவறு என பலரும் பிரதமர் மீது குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் அவரை நியமித்தது சரியானது என ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன் அவர் வெளிநாட்டவர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், உலகில் ஏனைய நாடுகளிலும் இவ்வாறு வெளிநாட்டவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கும் எதிராக வழக்குத் தொடர வேண்டும் என்ற பிணைமுறி ஆணைக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் பிணை முறி தொடர்பான செயற்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தவறு செய்யவில்லை என ஆணைக்குழு அறிவித்துள்ள விடயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment