இதன்பிரகாரம் வாகனங்கள், தொழிற்சாலைகள், பவுசர்கள் மற்றும் மொத்த விலைக்கு மண்ணெண்ணைய் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மண்ணெண்ணெய் உள்ளிட்ட இரு வகையான மண்ணெண்ணெய்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் இலங்கை மண்ணெண்ணெய் என்பது சிவப்பு நிறத்திலானது. இது சாதாரண பாவனைக்காக அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோர், மீனவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகும்.
இந்த நிலையில் கடந்த- 2017ம் ஆண்டில் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை மண்ணெண்ணையின் பாவனை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளதென பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாகச் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக இலாபம் பெறும் நோக்குடன் இலங்கை மண்ணெண்ணையை அதிகமாக விற்பனை செய்வது, தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்காகப் பஸ் மற்றும் பவுசர்களில் அனுப்புவது, டீசல்களில் மண்ணெண்ணை கலந்து விற்பது போன்றனவே எனத் தெரியவருகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டவிரோதமானது எனவும் இலங்கையின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
Post a Comment