ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பந்த தசநாயக்கவினால் பதுளை மாவட்டப் பாடசாலையொன்றின் பெண் அதிபரொருவரை மண்டியிடச் செய்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய இது தொடர்பான விரிவான விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, குறித்த விசாரணையைப் பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்வதற்கு ஊவா மாகாணக் கல்வி அமைச்சின் நடவடிக்கைகளை ஊவா மாகாண ஆளுநரின் கீழ் கொண்டு வருமாறும் ஜனாதிபதி ஊவா மாகாண ஆளுநரைப் பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(ஊவா மாகாண முதலமைச்சர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments:
Post a Comment