//]]>

Monday, January 8, 2018

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம்: சர்வதேச உதவிகள் பெறத் திட்டம்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்து நடாத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா  போன்ற நாடுகளிலிருந்து நிபுணர்களின் உதவிகளைப் பெற இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகளின் மூலம் 11,145 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோசடி மூலம் இழக்கப்பட்ட 11,145 மில்லியன் ரூபாவை மீட்பதற்கு மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தத் தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக் கொடுக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மோசடிகள், முறைகேடுகளைக் கண்டுபிடிக்கவும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களைக் கண்டறியவும் நடாத்தப்படும் விசாரணைகளுக்கு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் நிபுணத்துவ உதவிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment