//]]>

Monday, January 8, 2018

யாழ். மாவட்டத்தில் பிறப்பு வீதம் சடுதியாக அதிகரிப்பு


யாழ். மாவட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைவாக, கடந்த- 2017ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில 5,746 குழந்தைகள் பிறந்துள்ளன.   இது 2016 ஆம் ஆண்டு  பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும்.

2017ஆம் ஆண்டில் சிசு மரண வீதம் குறைவடைந்துள்ளது. வைத்திய  வசதிகள் அதிகரிப்பு, கடந்த சில ஆண்டுகளில் வைத்தியசாலைப் பணியாளர்களின் சேவையின் தரத்தில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றம் போன்ற காரணங்களால் சிசு மரணவீதம் கணிசமான வகையில் குறைவடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளிட்ட 1700 பேர் கடமையாற்றுவதுடன் இங்கு நாளாந்தம் 900 முதல் 1600 வரையான நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment