//]]>

Tuesday, January 9, 2018

வடக்கு ஆளுநரை பெருமைப்பட வைத்த யாழ்.தமிழர்கள்(Photos)

கொழும்பிலும், வெளிநாட்டிலும் உயர் பதவிகளை வகிப்பவர்கள் தமிழர்களே. பொறியல் துறையிலும், மருத்துவத் துறையிலும் யாழ்ப்பாணத்  தமிழர்களே சிறந்து விளங்குகின்றார்கள் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே யாழ்ப்பாணத்தில் கூறிப் பெருமைப்பட்டுள்ளார்.

யாழ்.மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மாணவ, மாணவிகளுக்குத் தென்னிலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளார். இதற்கான நிகழ்வு இன்று(09) பிற்பகல் பாடசாலை அதிபர் வை.ஜெயகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறிப் பெருமைப்பட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையிலிருந்து சிங்கள மொழி பேசும் நண்பர்கள் உங்களுக்காகப் பல இலட்சம் ரூபா பணத்தைச் செலவளித்து இங்கே வந்திருப்பது நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற செய்தியை சொல்வதற்காகவே. அன்பு, இரக்கம், கருணை உள்ளிட்டவற்றை மனங்களில் கொண்டு இங்கே உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கின்றார்கள்.

உங்களிடமிருந்து எதனையும் அவர்கள் எதிர்பார்த்து இந்த உதவிகளைச் செய்யவில்லை. யுத்தத்தால் பின்னடைவைச் சந்தித்த இந்த மாணவர்கள் தமது கல்வியில் உயர் நிலையினை அடைய வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கோடு இந்தக் கற்றல் உபகரணங்களைத் தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

எனவே, நீங்கள் உயர் நிலையை அடைந்த பின்னர் இன, குலம் மொழி பாராது நாட்டில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் உங்களது கடமையினை வேறுபாடின்றி ஆற்ற முன் வரவேண்டும் என்றே நான்  எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment