//]]>

Monday, January 8, 2018

சுன்னாகத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான முதியவருக்கு நேர்ந்தகதி (Video)



யாழ். சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான 70 வயது முதியவரொருவர் பராமரிக்க யாருமின்றித் தனித்து விடப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த முதியவர் உடற்பிணி காரணமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில் கவனிப்பார் யாருமின்றி நீண்டநேரமாக உறங்கியுள்ளார்.

 இந்த மனதை உருக்கும் சம்பவம் இன்று திங்கட்கிழமை(08) பிற்பகல்சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில் தேசிய சேமிப்பு வங்கிக்கு அருகில் பதிவாகியுள்ளது.
காங்கேசன்துறை வீதி யாழிலுள்ள வீதிகளில் முக்கியமானதொரு வீதியாகக் காணப்படும் நிலையில் முதியவர் நீண்டநேரமாக வீதியில் உறங்கிய போதும் அவரை வீதியால் சென்ற பொதுமக்கள் பொருட்படுத்தாமல் கடந்து சென்றது தான் கொடுமையிலும் கொடுமை.

தொழில் நிமிர்த்தம் சென்று விட்டு தற்செயலாக அவ்வீதியால் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஊடகவியலாளரொருவர் குறித்த முதியவரை எழுப்ப முற்பட்டுள்ளார். எனினும், உடற்பிணி காரணமாக அவரால் உடனடியாக எழும்ப முடியவில்லை.

குறித்த முதியவர் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ஊடகவியலாளர் அவரிடம் பேச்சுக் கொடுத்த போது, 

என்ர மனிசி நோய் காரணமாக இறந்து ஐந்து வருசமிருக்கும். நான் கவலையிலிருந்தனான். அதனால எப்ப இறந்தாரென சரியாக ஞாபகமில்ல. மனிசி இறந்ததன் பின்னர் என்னைக் கூட்டித்திரிய ஆட்களில்லை. எனக்கு நான்கு பெண் பிள்ளைகள். ஒரு ஆண்பிள்ளையும் உள்ளனர். ஆண்பிள்ள ஜேர்மனியிலிருக்கிறான். ஆனா, என்ர பிள்ளையள் என்னைக் கைவிட்டுட்டுதுகள். எனக்கு நரம்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கண்களிரண்டும் மறைச்சுப் போட்டுது. நான் பொல்லின்(ஊன்று கோல்) உதவியுடன் தான் இங்க வந்தனான் என்றார்.

பிள்ளைகளும் கைவிட்டுவிட்ட நிலையில் வீதியால் வரேக்க வாகனங்கள் இடிச்சால் என்ன செய்யிறது போக வேண்டியது தான் என்றார் கவலையுடன். 

நிலைமையை உணர்ந்த ஊடகவியலாளர் குறித்த முதியவரை கைத்தாங்கலாக அங்கிருந்து எழுப்பியதுடன், அவருக்குப் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு ஓரமாகக் கொண்டு சென்று விட்டுள்ளதுடன் அவரது உணவுக்குத் தேவையான சிறு நிதியுதவியையும் வழங்கியுள்ளார்.

 "என்ர பிள்ளைகள் செய்ய வேண்டியதை நீ செய்கிறாய்... நீயும் எனக்கு ஒரு பிள்ளை தான்..."என மேற்படி ஊடகவியலாளருக்கு குறித்த முதியவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment