தமிழ்த்தேசியப் பேரவையின் சார்பில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏழாலைப் பகுதியில் வட்டாரம்-03 இல் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் இளைஞரான வேட்பாளரொருவரின் சுவரொட்டி மீது இனம் தெரியாத நபர்கள் கழிவு ஓயில் வீசிச் சேதப்படுத்தியுள்ளனர். ஏழாலை தெற்கிலுள்ள உப அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றிருக்கலாமென அப்பகுதிப் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சுவரொட்டியிலுள்ள அவரது உருவப்படத்தின் முகத்தை இலக்கு வைத்தே இந்தக் கழிவோயில் வீச்சு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதிக்கு அருகில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய பல கட்சி வேட்பாளர்களின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள போதும் அவை மீது கழிவு ஓயில் வீச்சு இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment