இலண்டனில் இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரைக் கொழும்பு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கில ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
எமது தெருக்களில் சிலர் வெறுப்பைத் தூண்டியுள்ளனர். அவர்கள் பொலிஸாரால் விசாரிக்கப்படுவர். அந்தக் குற்றம் தொடர்பாக பிரிகேடியர் விசாரிக்கப்படுவாரா? என ஆசிய- பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சரிடம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கிளைவ் எபோர்ட் கேள்வி எழுப்பிய போது அதற்குப் பதிலளித்த ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல் பிரித்தானியா இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இதுகுறித்துப் பேசியிருந்தேன். இலங்கை அரசாங்கம் இதனைத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை என்றார்.
0 comments:
Post a Comment