//]]>

Thursday, February 22, 2018

குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவரும்!

தியத்தலாவ கஹகொல்ல பகுதியில் நேற்றுப் புதன்கிழமை(21) இடம்பெற்ற பேருந்து குண்டு வெடிப்புத் தீவிரவாத செயலாக இருந்தால் சேதமும், வெடிப்பும் மிகப் பெரியதாக இருந்திருக்கும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். பொலிஸார் மற்றும் இராணுவத்தின் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் முடிவில் குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தியத்தலாவவில் நேற்று அதிகாலை-05.30 மணியளவில் பேருந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்தனர். இவர்களில் 11 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த படையினரில் இரண்டு பேரின் நிலை ஆபத்தாகவுள்ளது.

இந்தநிலையில் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் தீவிரவாதச் செயல் அல்ல என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தீவிரவாதச் செயலாக இருந்திருந்தால் ஏற்பட்ட சேதமும், வெடிப்புத் திறனும் இன்னும் பெரியதாக இருந்திருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment