//]]>

Saturday, February 3, 2018

உள்ளுராட்சித் தேர்தல் முடிவு இவ்வாறு தான் அமையுமாம்!

எதிர்வரும்  பெப்ரவரி-10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  நாடளாவிய ரீதியில் மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சி  276 சபைகளைக் கைப்பற்றும் என மேற்படி  கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் அஜித் பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலமே இவ்விடயம் தொடர்பில் தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளாார்.

ஏனைய வட, கிழக்கிலுள்ள  51 உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறுமென ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை,வடக்கில் மொத்தம் 34 உள்ளூராட்சி சபைகளும், கிழக்கில் மொத்தம் 45 உள்ளூராட்சி சபைகளும் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment