மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) 101ஆவது பிறந்தநாள் விழா யாழ்.பண்டத்தரிப்பு சாந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை(17) பிற்பகல்- 03 மணி முதல் பண்டத்தரிப்பு பிரதேச எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகத் தலைவர் நா.முருகானந்தம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விழாவில் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் முதன்மை விருந்தினராகவும், வடமாகாண எம்.ஜி.ஆர் முன்னேற்றக்கழகத்தலைவர் இ.செல்வக்குமார் மற்றும் மானிப்பாய் ஜனசக்தி காப்புறுதி முகாமையாளர் எம்.சசிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மதப்பெரியார்களின் ஆசியுரைகள், மாணவர்களின் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இடம்பெற்ற சைக்கிளோட்டப்போட்டி மற்றும் கிரிக்கட், தாச்சி ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த விழாவில் வடமாகாணசபை உறுப்பினருடன், சிறப்பு விருந்தினர்கள், எம்.ஜி. ஆர் இரசிகர்கள், ஊரவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment