//]]>

Wednesday, February 28, 2018

விவசாயிகளிடமிருந்து நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்ய முடிவு

தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில் விவசாயிகளிடமிருந்து  நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் பி. ஹரிசன் ஆகியோர் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒரு கிலோ நாடு 38 ரூபா வீதமும், சம்பா அல்லது கீரி சம்பா ஒரு கிலோ 41 ரூபா வீதமும் நிர்ணய விலை அடிப்படையில் நெல் கொள்வனவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஆகக் குறைந்த நிர்ணய விலையை உறுதி செய்வதற்காக அரச தலையீடு அவசியப்படுகின்ற மாவட்டங்களில் குறித்த நிர்ணய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment