நாளை வியாழக்கிழமை(22) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய இலங்கையின் மின்சார சபையின் சேவைக்குட்பட்ட கிளிநொச்சிப் பிரதேசத்தில் தேராவில், இருட்டுமடு, மூங்கிலாறு, உடையார்கட்டு, கைவேலி, சுதந்திரபுரம், தேவிபுரம், வள்ளிபுனம், 68 ஆவது பிரிவு இராணுவ முகாம், 683 ஆவது பிரிவு இராணுவ முகாம், 18 VIR இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,
நாளை வியாழக்கிழமை காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்குளம், பெரியகூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், அட்டம்பஸ்கட கிராமம், தவசிக்குளம் கிராமம், பண்டாரிக்குளம் கிராமம், கண்ணாட்டி கணேசபுரம், புளிதறித்த புளியங்குளம் கிராமம், செக்கட்டிப்புலவு கிராமம், தாண்டிக்குளத்திலிருந்து சின்னவலயங்கட்டு வரை, மறக்கறம்பளையிலிருந்து மணிபுரம் வரை, முள்ளிக்குளம், கீரிசுட்டான், நொதேர்ண் பாம், ஆசிரியர் தொழிநுட்பக் கல்லூரி, புதுக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களம், பூந்தோட்டம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளிலும்,
நாளை(22) காலை-09.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம், கீரிசுட்டான், கங்காணிக்குளம், கபீப் சிற்றி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment