//]]>

Wednesday, February 21, 2018

குப்பிளானைச் சேர்ந்த குடும்பப் பெண்மணி காய்ச்சலால் திடீர் மரணம்(Photos)

யாழ். குப்பிளானில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட குப்பிளானைச் சேர்ந்த குடும்பப் பெண்மணியொருவர் திடீர் மரணமாகியுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(19) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சில நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மேற்படி பெண்மணிக்கு காய்ச்சல் குணமாகாத காரணத்தால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(19) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

நண்பகல்-12.30 மணியளவில் வைத்தியசாலை நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த போதும் சிகிச்சை பலனின்றி பிற்பகல்-03 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

குப்பிளான் தெற்கைச் சேர்ந்த ஐந்துபிள்ளைகளின் தாயாரான திருமதி- மீனாம்பிகை சந்திரகாந்தன்(வயது-64) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம்(20) குப்பிளானில் பெருமளவு ஊர்மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்று இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து பிற்பகல்- 03.15 மணியளவில் குப்பிளான் காடாகடம்பை இந்துமயானத்தில் அவரது உடலம் தீயுடன் சங்கமமானது.

இதேவேளை,மேற்படி குடும்பப் பெண்மணியின் திடீர் மரணம் குப்பிளான் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment