//]]>

Tuesday, February 6, 2018

உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

உள்ளூராட்சி  சபைத் தேர்தல் பரப்புரைகள் நாளை புதன்கிழமை(07) நள்ளிரவு- 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.

இந்நிலையில் பிரதான கட்சிகளின் இறுதித் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் தலைநகர் கொழும்பிலும், வெளிமாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளன.

இதன் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின்  தேர்தல் பரப்புரை இறுதிக் கூட்டம் மஹரகமவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் நாளை பிற்பகல்-03 மணி முதல் மாத்தறை, காலி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளதுடன் இறுதிக் கூட்டம் கொழும்பு பலாமரச் சந்தியில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரை இறுதி கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ  தலைமையில் ஹோமாகம பஸ் நிலையம் அமைந்துள்ள  பகுதியில்  இடம்பெறவுள்ளது.

இதேவேளை, வடக்கிலும், கிழக்கிலும் போட்டியிடும் கட்சிகளில் பிரசாரக் கூட்டங்களில் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

நாளை நள்ளிரவுக்குப் பின் எந்தவொரு தேர்தல் பரப்புரைப் பணிகளும் இடம்பெறுவது தடை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment