மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(16) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் உசன், விடத்தற்பளை, கெற்பலி, கிளாலி ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் இராணுவ பயிற்சிப் பாசறை, கொக்காவில் இராணுவ முகாம்-1, கொக்காவில் இராணுவ முகாம் -2 ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், ,மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்குளம், பெரிய கூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், குருக்கள் புதுக்குளம், குருக்களுர், பறயனாளங்குளம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment