தமிழ்நாடு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக இன்று புதன்கிழமை(28) காலை உயிரிழந்துள்ளார்.
கடந்த இரு மாதங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடித்துச் சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வெடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காஞ்சி சங்கரமடம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி மூச்சுத்திணறல் காரணமாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 82 வயது எனத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment