//]]>

Wednesday, February 28, 2018

தியத்தலாவ குண்டுவெடிப்பு: சந்தேகம் வெளியிடும் மேஜர் கமல் குணரத்ன


தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் படையினர்  உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு கைக்குண்டு வெடிப்பின் மூலம் நிச்சயமாக எந்தச் சூழ்நிலையிலும் தீ பரவாது. எனவே, இந்த வெடிப்புக்குக் காரணமான சூழல் தொடர்பாக அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

படை அதிகாரியொருவர் கைக்குண்டை வீட்டுக்குக் கொண்டு சென்ற போது தற்செயலாக நிகழ்ந்த வெடிப்பு என்ற முடிவுக்குப்  பொதுமக்கள் வந்தது ஏமாற்றம் தருகிறது.

அரசியல் உறுதியற்ற நிலை தொடரும் சூழலில், நாட்டைக் குழப்பத்துக்குள்ளாக்கும் வகையில்  பல்வேறு தந்திரோபாயங்கள் கையாளப்படக் கூடும்.கைக்குண்டு வெடிப்புக்குப் பின்னர் தீ பரவியது என்றால் அந்தப் பேருந்து பெற்றோலில் இயக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment