//]]>

Friday, February 16, 2018

களைகட்டிய குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மெய்வல்லுநர் போட்டி(Videos)

யாழ். குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று வெள்ளிக்கிழமை(16) பிற்பகல் குப்பிளான் வடக்கு கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகிலுள்ள விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் வித்தியாலய முதல்வர் க. காராளசிங்கம் தலைமையில்  இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி- அனந்தி சசிதரன் பிரதம விருந்தினராகவும், பலாலி வடக்கு அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் திருமதி - சிவந்தினி சுகுமார் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் வித்தியாலய மாணவ, மாணவிகளின் பல்வேறு மெய்வல்லுநர் விளையாட்டு  நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக விநோத உடை, கயிறிழுத்தல், அஞ்சலோட்டம், கண்கவர் இடைவேளை நிகழ்வுகள் என இல்ல மெய்வல்லுநர் போட்டி களைகட்டியது.

இல்ல மெய்வல்லுநர் போட்டி நிலைவரப்படி தம்பிராசா இல்லம்(சிவப்பு)- 480 புள்ளிகள் பெற்று முதலாமிடத்தைத் தட்டிக் கொண்டதுடன் சுப்பையா இல்லம்(மஞ்சள் )- 447 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலுமுள்ளது.
இல்ல அலங்காரத்திலும் தம்பிராசா இல்லம்(சிவப்பு) முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்த நிகழ்வில் வித்தியாலய மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செல்வநாயகம் ரவிசாந்-)

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment