//]]>

Friday, November 25, 2016

கை நிறைய காசு!! ஆனால் 45 வயதைவிட குறைவாக இருக்க வேண்டும்!! –



இலங்கை துறைமுக அதிகார சபையில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வயதெல்லை:- 45 வயதைவிட குறைவாக இருக்க வேண்டும் (இந்த வயது எல்லை பொதுத்துறையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அல்ல)

விண்ணப்ப முடிவு திகதி 18.11.12016

துணை தலைமை பாதுகாப்பு முகாமையாளர்

தகைமைகள் :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வியகம் (academy) / பாடசாலை ஒன்றில் பட்டம் / டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் :- இலங்கை இராணுவத்தில் துணை தளபதியாக அல்லது அதற்கு சமமான தகுதியுடைய வேறு இரண்டு சேவைகள் அல்லது பொலிஸ் துறையில் இரண்டு 

வருடம் சேவை அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் :- கொடுப்பனவுகள் (allowances) உட்பட சுமார் 75,700/= ரூபா

முகாமையாளர் (பாதுகாப்பு)

தகைமைகள் :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வியகம் (academy) / பாடசாலை ஒன்றில் பட்டம் / டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் :- இராணுவத்தில் major (மேஜர்)ஆக அல்லது மான தகுதியுடைய வேறு இரண்டு சேவைகள் அல்லது பொலிஸ் துறையில் இரண்டு வருடம் சேவை அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் :- கொடுப்பனவுகள் (allowances) உட்பட சுமார் 68,700/= ரூபா

Note :- இவ்விரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் சிறந்த தேக ஆரோக்கியம் உடையவர்களாகவும் கேட்டல் பார்த்தல் குறைப்பாடு அற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் உயரம் 5′ 2” மார்பு சுற்றளவு 32” ஆக இருக்க வேண்டும்.

சிரேஷ்ட சட்ட அதிகாரி

தகைமைகள் :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் ஒன்றில் சட்டத் துறையில் பட்டம் பெற்றிருப்பதோடு சட்ட வழக்கறிஞர் (attorney – at- law) விலும் சித்தியடைந்திருக்க வேண்டும்.
அனுபவம் :- ஒரு புகழ்பெற்ற அரசாங்க அல்லது தனியார் துறை அமைப்பு ஒன்றில் 5 வருடம் சேவையாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

அல்லது

சட்டவழக்கறிஞராகவும் ஒரு புகழ்பெற்ற அரசாங்க அல்லது தனியார் துறை அமைப்பு ஒன்றில் 10 வருடம் சேவையாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.
சம்பளம் :- கொடுப்பனவுகள் (allowances) உட்பட சுமார் 75, 250/= ரூபா
சட்ட அலுவலர்

தகைமைகள் :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் ஒன்றில் சட்டத் துறையில் பட்டம் பெற்றிருப்பதோடு சட்ட வழக்கறிஞர் (attorney – at- law) விலும் சித்தியடைந்திருக்க வேண்டும்

அனுபவம்:- ஒரு புகழ்பெற்ற அரசாங்க அல்லது தனியார் துறை அமைப்பு ஒன்றில் 5 வருடம் சேவையாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.


அல்லது

சட்டவழக்கறிஞராகவும் ஒரு புகழ்பெற்ற அரசாங்க அல்லது தனியார் துறை அமைப்பு ஒன்றில் 10 வருடம் சேவையாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.

சிரேஷ்ட சட்ட அதிகாரி சட்ட அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம்/தமிழ் அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளர் (notary public)க்கான அனுமதி பத்திரம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :- கொடுப்பனவுகள் (allowances) உட்பட சுமார் 72, 300/= ரூபா


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment