யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மரு
காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகள் தொடர்பாக அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டும் என வலியுறுத்திக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்பு உடைகள் அணிந்தும், கறுப்புப் பட்டிகள் அணிந்தும் சித்திரைப் புத்தாண்டைத் துக்க நாளாக அனுஷ்டித்தனர்.
நேற்றைய தினம் போராட்டக் களத்திற்கு வருகை தந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் தமது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், காணாமல் ஆக்கப்பட்ட
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்தினமான நேற்று முன்தினமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் திருமதி- அனந்தி சசிதரன் ஆகியோர் போராட்டக் களத்திற்குச் சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
நாம் ஒரு மாதம் கடந்த நிலையிலும் தொடர்ச்சியாக எமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் தமது போராட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்காமை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment