//]]>

Wednesday, February 14, 2018

நெடுந்தீவில் ஆடை வடிவமைத்தல்,அழகுக்கலை கண்காட்சி

வடமாகாணக் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் நெடுந்தீவு மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி இன்று புதன்கிழமை(14) முற்பகல்-10.30 மணி முதல் நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவுப் பிரதேச செயலர் சி.ஜெயகாந்த் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பிரதம விருந்தினராகவும், யாழ். மாவட்டக் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நா. பஞ்சலிங்கம், நெடுந்தீவுப் பிரதேச சபையின் செயலாளர் கு.இரத்தினராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், நெடுந்தீவு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். ஆர். சர்வேந்திரன், நெடுந்தீவுப் பிரதேச செயலக கணக்காளர் அ. நிர்மல், கிராம அபிவிருத்தித் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் அ. நிர்மல் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு பயனடையுமாறு கண்காட்சி நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment