சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே நடிகர் சங்க வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
காலாவதியான உறுப்பினர் அட்டை வைத்திருந்தவர்கள் பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் பொதுக்குழு தொடங்கி சில மணி நேரத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதற்கிடையே நடிகர் சங்கத் துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடியை மர்ம நபர் உடைத்ததால் பொதுக்குழு வளாகத்திற்கு வெளியே பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதனால் கருணாஸ் தரப்புக்கும், அந்த மர்ம கும்பலுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் நிலைமையை போலீஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதே போல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஷாலின் அலுவலகமும் தாக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறையினரிடம் நடிகர் சங்கம் சார்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கைப்பில் பேசிய கமல்...: நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு ஸ்கைப் வசதி மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
அவர் பேசும் போது, நடிகர் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளும் நமது இடத்தில் நடைபெற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அது நிறைவேறிவிட்டது. என்னைவிட வயதில் இளையவர்கள் மத்தியில் மிகுந்த நட்பும், பொறுப்பு உணர்வும் இருப்பதை உணர்கிறேன்.
இதில் மறைந்த கலைஞர்களின் பங்களிப்பும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சியில் உள்ளது. பேசவாய்ப்பளித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும் என பேசினார் கமல்.
0 comments:
Post a Comment