யாழ். குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 50 தொடக்கம் 60 ரூபா வரையும், ஒரு கிலோ இதரை வாழைப்பழம் 50 ரூபாவாகவும் தற்போது விற்பனையாகி வருகிறது.
அத்துடன் யாழ். மாவட்டத்தின் மருதனார்மடம், சுன்னாகம் பொதுச் சந்தைகளிலும் கதலி, இதரை வாழைப்பழங்கள் மேற்படி விலைக்கே விற்கப்படுவதுடன், வர்த்தக நிலையங்களிலும் வாழைப்பழத்தின் விலை குறைவடைந்துள்ளது.
யாழில் கடந்த பல நாட்களாகத் தொடர்ச்சியாக நீடித்த மழையுடனான காலநிலையும், வாழைப்பழத்தின் அதிகரித்த வாழைக்குலைகளின் வருகையுமே விலை வீழ்ச்சிக்குக் காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு வாரத்திற்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம்- 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment